தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு + "||" + Delhi CM-designate Arvind Kejriwal has invited Prime Minister Narendra Modi to attend his swearing-in ceremony on 16th February

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கெஜ்ரிவால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர், முதல்-மந்திரி ஆவது, இது தொடர்ந்து 3-வது தடவை ஆகும். டெல்லி ராமலீலா மைதானத்தில் 16-ம் தேதி காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடக்கிறது. கெஜ்ரிவாலுடன் எல்லா கேபினட் மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். பதவி ஏற்பு விழாவில், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கேட்டுக்கொண்டார்.

மத்தியில் பா.ஜனதா ஆட்சியமைத்த பின்னர் மாநில சட்டசபை தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள கட்சிகள் வெற்றிப்பெற்றால் பதவி ஏற்பு விழாவில் பிற மாநில எதிர்க்கட்சி தலைவர்கள், தேசிய தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோன்று டெல்லியில் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியல் தலைவர்கள், பிற மாநில முதல்- மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரியாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜரிவால் சார்பில், அழைப்புக் கடிதம் பிரமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க குழந்தை மஃப்ளா்மேன் ஆவ்யன் தோமரை சிறப்பு அழைப்பாளராக ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கெஜ்ரிவால்போல தொப்பி, மப்ளர் அணிந்து, மீசை வரைந்து, சிறிய கண்ணாடி ஒன்றை அணிந்துகொண்டு அனைவரையும் கவர்ந்த அந்த குழந்தை பற்றிய வீடியோக்கள் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலானது நினைவுகூறத்தக்கது.