மாநில செய்திகள்

வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை - கே.எஸ்.அழகிரி + "||" + The possibilities for allocating funds to development projects are not absolute KSAzhagiri

வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை - கே.எஸ்.அழகிரி

வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை - கே.எஸ்.அழகிரி
2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கடன் சுமை காரணமாக வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக பட்ஜெட் இன்று (பிப்ரவரி-14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. 

இது குறித்து  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசின் நிதிநிலைமை அதல பாதாளத்தை நோக்கி வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிற நிலையில், 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் சமர்ப்பித்திருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையில் புதுமையான அறிவிப்புகள் எதுவும் இல்லை. 

தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை. வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களோ, புதிய தொழிற்சாலைகளுக்கான அறிவிப்புகளோ இல்லை. காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்ததைத் தவிர, அதற்கான நிதி ஒதுக்கீடுகளோ, அதுகுறித்த குறிப்புகளோ நிதிநிலை அறிக்கையில் இல்லை. இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை கண்துடைப்பு அறிவிப்புகள் தான் அதிகம் காணப்படுகின்றன.

தமிழக அரசின் நிதிநிலையைப் பார்க்கிற போது, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ரூபாய் 17 லட்சத்து 26 ஆயிரத்து 681 கோடியாகவும், கடன் ரூபாய் 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடியாகவும் இருந்தது. தற்போது, நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடு ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரத்து 992 கோடி. இதில் ஊதியமாக ரூபாய் 64 ஆயிரத்து 208 கோடியும், மானியமாக ரூபாய் 94 ஆயிரத்து 99 கோடியும் வழங்க வேண்டிய நிலையில் நிதிநிலைமை இருக்கிறது.

எனவே, இத்தகைய பற்றாக்குறை நிதிநிலைமையில் அ.தி.மு.க. ஆட்சி செய்கிறது. ஏறத்தாழ தமிழக அரசின் நிதி நிலைமை குறிப்பாக, கடன் சுமையின் காரணமாகவும், அதற்காக செலுத்தப்படுகிற வட்டியினாலும் வளர்ச்சித் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை என்பதை நிதிநிலை அறிக்கையில் காண முடிகிறது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சியை ஏற்படுத்துவதையோ, வேலைவாய்ப்பை பெருக்குவதையோ, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையோ நோக்கமாகக் கொண்டு அமையாத நிலையில் அ.தி.மு.க.வின் இறுதி பட்ஜெட் மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நோய் தொற்றில் இருந்து கிராமப்புற மக்களை காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
கொரோனா நோய் தொற்றில் இருந்து கிராமப்புற மக்களை காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டு என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
2. சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி அறிக்கை
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
3. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி அறிக்கை
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
4. தந்தை-மகன் இறந்த சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் கே.எஸ்.அழகிரி பேட்டி
தந்தை-மகன் இறந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.
5. மக்களின் துயரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
மக்களின் துயரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர்கே.எஸ்.அழகிரி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...