உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் ரோஜா மலர்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது + "||" + Beijing florist takes on COVID-19 for Valentine's Day

கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் ரோஜா மலர்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது

கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் ரோஜா மலர்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் ரோஜா மலர்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது.
பெய்ஜிங்,

பிப்ரவரி 14ம் தேதியை உலகம் முழுவதும் பல நாடுகள் வாலண்டைன்ஸ் டே என்று காதலர் தினமாகக் கொண்டாடி வருகிறது. இந்தநிலையில்  சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆயிரத்து 350  பேர் உயிரிழந்த நிலையில், 64ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி உள்ளனர். 

இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சீனாவில் ரோஜா மலர்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்து  உள்ளதாக கூறப்படுகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு கடையில், வாடிக்கையாளர் நலன் கருதி கையை சுத்தம் செய்யும் திரவ பாட்டில் மற்றும் கை உறைகள் வைக்கப்பட்டு உள்ளன.