மாநில செய்திகள்

சென்னையில் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 120 இஸ்லாமியர்கள் விடுதலை + "||" + 120 Muslims arrested for protesting in Chennai released

சென்னையில் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 120 இஸ்லாமியர்கள் விடுதலை

சென்னையில் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 120 இஸ்லாமியர்கள் விடுதலை
சென்னையில் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 120 இஸ்லாமியர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னை வண்ணாரபேட்டையில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்தியதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினரின் தலைவர்களுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும் என்று காவல் ஆணையர் வலியுறுத்தினார். இதனையடுத்து போராட்டத்தின் போது போலீசாரால் கைது செய்யப்பட்ட 120 இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை, ஈரோடு பகுதிகளில் இருந்து திருவாடானைக்கு வந்த 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - கலெக்டர் தகவல்
சென்னை, ஈரோடு பகுதிகளில் இருந்து திருவாடானைக்கு வந்த 24 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
2. சென்னையில், மளிகை பொருட்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு - தட்டுப்பாடு காரணமா?
சென்னையில் மளிகை பொருட்கள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ரூ.150-க்கும், வத்தல் ரூ.250-க்கும் விற்பனையாகிறது.
3. கொரோனாவுக்கு எதிராக நடப்பது வாழ்வா? சாவா? போராட்டம் - ஊரடங்கு உத்தரவு பற்றி மோடி உருக்கமான பேச்சு
கொரோனாவுக்கு எதிராக நடப்பது வாழ்வா? சாவா? போராட்டம் என்றும், கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார்.
4. மாவட்டம் முழுவதும் 358 வழக்குகள் பதிவு; 412 பேர் கைது
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள 144 தடை உத்தரவை மீறியதாக 358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்: தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் அறிவிப்பு
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கூறி வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அவரது கைது தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.