உலக செய்திகள்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்கிறது; 6 மருத்துவ ஊழியர்கள் பலி + "||" + Coronavirus virus continues in China kills 6 medical staff

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்கிறது; 6 மருத்துவ ஊழியர்கள் பலி

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்கிறது; 6 மருத்துவ ஊழியர்கள் பலி
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி 6 மருத்துவ ஊழியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 1,716 பேருக்கு இந்த நோய் பாதித்து இருப்பது உறுதியாகி உள்ளது.
பீஜிங், 

உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், சீனாவில் ருத்ர தாண்டவமாடி வருகிறது. இந்த நோய் பற்றிய அதிர்ச்சி தகவல்களை அங்கு முதலில் வெளியிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டாக்டர் லி வென்லியாங்கும் அதே வைரஸ் நோய்க்கு பலியானது மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையில் பக்க பலமாக இருந்து வந்த மருத்துவ ஊழியர்கள் 6 பேர் பலியாகி இருக்கிறார்கள், அது மட்டுமல்ல மேலும் 1,716 சுகாதார ஊழியர்களுக்கு இந்த வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது.

1,716 பேரில், 1,102 பேர் உகான் நகரை சேர்ந்தவர்கள், 400 பேர் ஹூபெய் மாகாணத்தின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள்.

இந்த தகவலை தேசிய சுகாதார ஆணையத்தின் துணை மந்திரி ஜெங் யிக்சின் வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிற டாக்டர்களும், மருத்துவ ஊழியர்களும் போதுமான முக கவசங்கள், பாதுகாப்பு உடைகள் இல்லாமல் பணியாற்றுவதால், அவர்களுக்கு இந்த நோய் தாக்குவது அதிகரித்து வருகிறது.

உகான் நகரில் உள்ள சமுதாய மருத்துவ மையம் ஒன்றில் பணியாற்றுகிற டாக்டர் ஒருவர் கூறும்போது, என்னோடு பணியாற்றுகிற 16 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகளாக நுரையீரல் தொற்றும், இருமலும் இருக்கிறது என வேதனையுடன் தெரிவித்தார்.

இந்த நிலையில், சீனாவில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் நோய் தாக்கி மேலும் 121 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் அங்கு இந்த வைரஸ் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,488 ஆக உயர்ந்துள்ளது.

ஹூபெய் மாகாணத்தில் மட்டுமே 116 பேர் பலியாகி உள்ளனர். இங்கு 4,823 பேருக்கு இந்த நோய் தாக்கி இருப்பது, மருத்துவ பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ஒட்டுமொத்தமாக 5,090 பேருக்கு புதிதாக இந்த கொரோனா வைரஸ் நோய் பாதித்து இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் அந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 894 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருவது மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,734 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் 166 ஆக உயர்ந்துள்ளது.
2. நடிகர் மோகன்லால் ரூ.50 லட்சம் நிவாரண நிதி
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன.
3. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அதிருப்தி உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்துவோம் - அமெரிக்கா திடீர் மிரட்டல்
கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
4. கொரோனா வைரஸ் சூழ்நிலையை பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதா? - போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டிப்பு
கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலையும் தங்களுக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிப்பவர்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டித்தார்.
5. கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவன்- மாணவி
கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு மாணவனும், ஒருமாணவியும் விழிப்புணர்வு ஏற்படுதத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...