தேசிய செய்திகள்

பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம் ; 30 -க்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார் + "||" + PM Modi in Varanasi on Sunday; to launch over 30 projects

பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம் ; 30 -க்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம் ;  30 -க்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி, தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு நாளை செல்கிறார்.
புதுடெல்லி, 

தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி நாளை செல்கிறார். இந்தப்பயணத்தின் போது 30 க்கும் மேற்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.  

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பிரதமர் மோடி தனது சொந்த மக்களவை தொகுதிக்கு நாளை ( ஞாயிற்றுக்கிழமை) செல்கிறார். இந்த பயணத்தின் போது பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார். 

அதேபோல், பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நினைவிடம் மற்றும் அவரது சிலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.  தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, வாரணாசியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையற்றுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆக்ராவில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லி வந்தடைந்தார்
ஆக்ராவில் இருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெல்லி வந்தடைந்தார்.
2. பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் பற்றி டிரம்ப் பேசுவார் - அமெரிக்கா தகவல்
நாளை இந்தியாவுக்கு வரும்போது, பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் பற்றி டிரம்ப் பேசுவார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
3. விரைவான நீதியை வழங்க தொழில்நுட்பம் உதவும் - சர்வதேச நீதி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
விரைவான நீதியை வழங்க தொழில்நுட்பம் உதவும் என சர்வதேச நீதி மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
4. "பசுமை பொருளாதாரத்தை" மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் -பிரதமர் மோடி
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கிய பங்கை ஆற்றும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
5. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா மரியாதை
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மரியாதை செலுத்தினார்.