தேசிய செய்திகள்

கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் + "||" + BJP announces new state presidents for Sikkim, MP & Kerala

கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்

கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்
மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,

தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகத் பிரகாஷ் நட்டா, மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பாஜக தலைவர்களை நியமித்துள்ளார்.

அதன்படி, கேரள மாநில பாஜக தலைவராக சுரேந்திரனும், மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மா மற்றும் சிக்கிம் மாநில பாஜக தலைவராக தல் பகதூர் சவுகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழக பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த ஆண்டு தலைவர் நியமிக்கப்பட்டால்தான் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே தமிழகத்திற்கு பாஜக தலைவர் விரைவில் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த 6 மாதங்களாக தமிழக பாஜக தலைவர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.