மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியவர்கள் யார்? - டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் + "||" + Group-4 Examination: Who needs to upload certificates? - TNPSC Description

குரூப்-4 தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியவர்கள் யார்? - டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

குரூப்-4 தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியவர்கள் யார்? - டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
குரூப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் யார் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.
சென்னை, 

குரூப்-4 தேர்வில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டியவர்கள் யார்? என்பது தொடர்பாக விளக்கம் அளித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 12-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், குரூப்-4 தேர்வுக்கு தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் ‘ஸ்கேன்’ செய்யப்பட்ட தங்களது சான்றிதழ்களின் நகல்களை கடந்த 13-ந்தேதி முதல் 18-ந்தேதிக்குள் (நாளை) தேர்வாணைய இணையதளத்தில், அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவித்து இருந்தது.

இந்த செய்தி சில தேர்வர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, ஏற்கனவே இந்த தேர்வுக்கு என்று தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களும் மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி முதல் அந்த மாதம் 18-ந்தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்த தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் தகுதியான தேர்வர்கள் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் கடந்த 12-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரும் தங்களது சான்றிதழை மீண்டும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய தேவை இல்லை.

அவர்கள் கலந்தாய்வுக்கு வரும்போது தங்களது ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வந்தால் போதுமானதாகும். தற்போது கூடுதலாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் தங்களது சான்றிதழ்களின் நகல்களை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்தால் போதுமானது. தற்போது சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய 27 பேருடைய பதிவு எண்கள் 12-ந்தேதியன்று வெளியிடப்பட்ட கலந்தாய்வுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலின் கீழே 47-வது பக்கத்தில் றிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்
வேலூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்.
2. விபத்து இல்லாமல் பஸ்சை இயக்கிய டிரைவர் உள்பட 333 பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசு அமைச்சர்கள் வழங்கினர்
நாமக்கல்லில் விபத்து இல்லாமல் பஸ்சை இயக்கிய டிரைவர் உள்பட 333 பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.
3. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க கோரி வழக்கு - அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க கோரிய வழக்கில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. குரூப்-4 தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்
குரூப்-4 தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
5. குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..?
குரூப்-4 தேர்வை ஒட்டு மொத்தமாக ரத்து செய்வது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.