மாநில செய்திகள்

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மனு; விரைவில் விசாரணை + "||" + Stalin's petition to the High Court to overturn the defamation suit; Inquire soon

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மனு; விரைவில் விசாரணை

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மனு; விரைவில் விசாரணை
தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை, 

உள்ளாட்சித்துறை ஊழல் துறையாக மாறிவிட்டது என்றும், எம் சாண்ட் வாங்கியதில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை முரசொலி பத்திரிகையில் வெளியானது.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த கோர்ட்டு, வருகிற 24-ந் தேதி நேரில் ஆஜராக மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை வக்கீல் பி.குமரேசன் நேற்று தாக்கல் செய்தார். மனுவில் கூறியிருப்பதாவது:-

மாநகராட்சி டெண்டர்களில் எம் சாண்ட் உபயோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சில ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசிலும் அந்த அமைப்பு புகார் செய்துள்ளது. ஆங்கில பத்திரிகைகளில், மணல் டெண்டரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக செய்திகளை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த விசாரணையில் ஊடுருவும் விதமாக, மு.க.ஸ்டாலினுக்கு செசன்சு கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும், ஒரு எதிர்கட்சித்தலைவர் எப்படி செயல்பட வேண்டும்? என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் கூறியுள்ளதற்கு ஏற்ப, இதுபோன்ற ஊழல்கள், முறைகேடுகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவராக நான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளேன். இதில் எந்த தவறும் இல்லை.

எனவே, செசன்சு கோர்ட்டில் எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, வருகிற 24-ந் தேதி நேரில் ஆஜராக எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி: அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் மனு - தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. 68-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி வாழ்த்து - நலத்திட்ட உதவிகள் வழங்கி தி.மு.க.வினர் கொண்டாடினர்
மு.க.ஸ்டாலினின் 68-வது பிறந்தநாளையொட்டி, ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நலத்திட்ட உதவிகள் வழங்கி அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர் கொண்டாடினர்.
4. இந்து மக்கள் கட்சி தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய நித்யானந்தா மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய நித்யானந்தா மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
5. ஆஸ்பத்திரியில் அன்பழகன்: என் பிறந்த நாளன்று யாரும் வாழ்த்து சொல்ல வரவேண்டாம் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஆஸ்பத்திரியில் க.அன்பழகன் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே என் பிறந்த நாளன்று யாரும் வாழ்த்து சொல்ல வரவேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.