தேசிய செய்திகள்

மராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு + "||" + We will not block the national census Announced by Cheif Minister Uttav Thackeray

மராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மராட்டியத்தில்  தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம்  முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மும்பை, 

மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ள சிவசேனா சட்டத்தை ஆதரித்து மக்களவையில் வாக்களித்தது. ஆனால் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

அதே நேரத்தில் மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார். ஆனால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மராட்டியத்தில் தடை இல்லை என்று அவர் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் மராட்டியத்தில் அமல்படுத்தப்படும் என யாரும் கவலைப்பட வேண்டாம். தேசிய குடிமக்கள் பதிவேடு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டால் அது மராட்டியத்தில் அமல்படுத்தப்படாது.

ஆனால் என்.பி.ஆர். என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறைதான். ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இது நடக்கும்போது யாரும் பாதிக்கப்படுவார்கள் என்று நான் கருதவில்லை. எனவே இதை மராட்டியத்தில் அமல்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. இதை நாங்கள் தடுக்க மாட்டோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பா? - அதிகாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு
தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துள்ளதாக கருதி அதிகாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளார்.
4. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் - தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தி.மு.க. சார்பில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.