மாநில செய்திகள்

திருப்பூரில் லாரி - பேருந்து மோதி பயங்கர விபத்து ; 20 பேர் பலி + "||" + bus - Truck collision near Tirupur 20 died

திருப்பூரில் லாரி - பேருந்து மோதி பயங்கர விபத்து ; 20 பேர் பலி

திருப்பூரில் லாரி - பேருந்து மோதி பயங்கர விபத்து ; 20 பேர் பலி
திருப்பூர் மாவட்டம் அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் பலியாகினர்.
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து  திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்டன.  

இந்த கோர விபத்தில், 6 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல்,  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நரிப்பள்ளம் பகுதியில் சுற்றுலா பேருந்தும் ஆம்னி பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.  

20-க்கும் மேற்பட்ட பயணிகள்  படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்தில் பலியானவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
2. திருப்பூரில் வீட்டில் பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது ரூ.2 லட்சம் பறிமுதல்; 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
திருப்பூரில் வீட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் பணமும் 3 மோட்டார்சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
3. திருப்பூர் மாவட்டத்தில் சமூக தொற்று இல்லை - கலெக்டர் விஜயகார்த்திகேயன் தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் சமூக தொற்று இல்லை. இதனால் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
4. திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனையை அமைச்சர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
5. திருப்பூர் அம்மா உணவகத்தில் ஆணையாளர் ஆய்வு
திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் நேற்று ஆய்வு செய்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...