தேசிய செய்திகள்

21-ம் நூற்றாண்டின் ‘மிகப்பெரிய பைத்தியகாரத்தனம் சரக்கு, சேவை வரி’- சுப்பிரமணியசாமி பரபரப்பு பேச்சு + "||" + Of the 21st century The biggest madness is freight and service tax Subramaniyasamy sensational talk

21-ம் நூற்றாண்டின் ‘மிகப்பெரிய பைத்தியகாரத்தனம் சரக்கு, சேவை வரி’- சுப்பிரமணியசாமி பரபரப்பு பேச்சு

21-ம் நூற்றாண்டின் ‘மிகப்பெரிய பைத்தியகாரத்தனம் சரக்கு, சேவை வரி’- சுப்பிரமணியசாமி பரபரப்பு பேச்சு
21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியகாரத்தனம் சரக்கு, சேவை வரி என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
ஐதராபாத், 

ஐதராபாத்தில் பிரக்னாபாரதி சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பு ‘ இந்தியா, 2030-க்குள் ஒரு பொருளாதார வல்லரசு’ என்ற தலைப்பில் நேற்று ஒரு கருத்தரங்கு நடத்தியது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாரதீய ஜனதா கட்சி அரசு கொண்டுவந்துள்ள சரக்கு, சேவை வரியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

நாடு அவ்வப்போது 8 சதவீத பொருளாதார வளர்ச்சி கண்டிருந் தாலும்கூட, அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களில் எந்த முன் னேற்றமும் காணப்படவில்லை. முதலீட்டாளர்களை வருமான வரியின் பெயராலும், 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனமான சரக்கு, சேவை வரியின் பெயராலும் பயமுறுத்த வேண்டாம். சரக்கு, சேவை வரி மிகவும் சிக்கலானது. எந்த படிவத்தை நிரப்ப வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.