மாநில செய்திகள்

சென்னை ஐஐடி மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்த பேராசிரியர் கைது ! + "||" + IIT students from Chennai Porn Pornography video Professor arrested!

சென்னை ஐஐடி மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்த பேராசிரியர் கைது !

சென்னை ஐஐடி மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்த பேராசிரியர் கைது !
சென்னை ஐஐடி மாணவிகளை கழிவறையில் ரகசிய கேமிரா வைத்து ஆபாசமாக படம் பிடித்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை

சென்னை ஐஐடியில் விண்வெளி பொறியியல் துறை ஆய்வு கூடத்தில் மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சிக்காக சென்ற மாணவி அங்கிருந்த கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு சுவற்றில் செல்போன் கேமரா போல் ஒன்று தெரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கூச்சலிட்டுள்ளார். 

சத்தம் கேட்டு வந்த நபர்கள் அருகே இருந்த அதே துறையை சேர்ந்த உதவிப்பேராசிரியராக பணிபுரியும் சுபம் பானர்ஜி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர் அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் அவரை ஐஐடி நிர்வாகத்தினர் போலீசில் ஒப்படைத்தனர்.

கோட்டூர்புரம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்றும். ஏரோஸ்பேஸ் துறையில்  உதவி பேராசிரியராக  பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது.  பெண்கள் கழிவறையில் உள்ள தண்ணீர் செல்லும் பைப்புகள் இடையே உள்ள ஓட்டையின் வழியாக செல்போனை வைத்து, பெண்கள் கழிவறைக்கு செல்லும் போது அவர்களை வீடியோ எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

சம்பவத்தின் போது கையும் களவுமாக பிடிபட்ட சுபம் பானர்ஜி போனை ஆய்வு செய்த போது அதில் உள்ள அனைத்து வீடியோக்களையும் அவர் அழித்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல பெண்களை வீடியோ எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோட்டூர்புரம் போலீசார் சுபம் பானர்ஜியயை  புழல் சிறையில் அடைத்தனர்.

எனினும் நீதிமன்ற விசாரணையில் செல்போன் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்பதால், அந்த செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோக்களை மீண்டும் எடுப்பதற்காக தடய அறிவியல் துறையிடம் அந்த செல்போனை போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...