உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: தென்கொரியாவில் இரண்டாவது உயிரிழப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் + "||" + Coronavirus: South Korea 'emergency' measures as infections increase

கொரோனா வைரஸ்: தென்கொரியாவில் இரண்டாவது உயிரிழப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கொரோனா வைரஸ்: தென்கொரியாவில் இரண்டாவது உயிரிழப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கொரோனா வைரஸ் காரணமாக தென்கொரியாவில் இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சீயோல்,

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2236 பேர் பலியாகி உள்ளநிலையில், தற்போது தென் கொரியாவில் இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவ துவங்கி உள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் கொரோனா வைரஸால் ஏற்கனவே 100 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 13 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுகாதார ரீதியாக நாட்டில் அவசரநிலை இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் சூங் தெரிவித்துள்ளார். நேற்று அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது தென் கொரியாவில் இரண்டாவது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் தெற்கு பகுதி நகரங்களான டேகு மற்றும் சேநோங்டோ ஆகியவை ''சிறப்பு பராமரிப்பு மண்டலங்களாக'' அறிவிக்கப்பட்டுள்ளன. டேகு நகரத்தின் சாலைகள் தற்போது பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரசால் மிகப்பெரிய ஆபத்து...!
கொரோனா நோயாளி முக கவசம்அணியாமல் தும்மினாலோ, இருமினாலோ வைரஸ் சுற்றியிருப்பவர்களை தாக்கும்.
2. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. கணவருக்கு ‘93’ மனைவிக்கு ‘88’ கொரோனா வைரசில் இருந்து மீண்ட வயதான கேரள தம்பதியர் - குணமடைந்தது எப்படி? ருசிகர தகவல்கள்
கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
4. 2-ஆம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது: ஐ.நா தலைவர்
2-ஆம் உலகப் போருக்கு பின்னர் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது என்று ஐநா தலைவர் கூறினார்.
5. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.