தேசிய செய்திகள்

கல்லூரி மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு: ராமசேனை தலைவர் அறிவிப்பால் சர்ச்சை + "||" + Ram Sena man announces Rs 10 L bounty for killing Amulya

கல்லூரி மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு: ராமசேனை தலைவர் அறிவிப்பால் சர்ச்சை

கல்லூரி மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு: ராமசேனை தலைவர் அறிவிப்பால் சர்ச்சை
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதால் கைதான கல்லூரி மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு என்ற ராமசேனை தலைவர் அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.
பெங்களூரு,

பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவி அமுல்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டேயில் நேற்று ஸ்ரீராமசேனை அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அமுல்யாவின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும், தீவைத்து எரித்தும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதில் அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் சஞ்ஜீவ் மரடி பேசியதாவது:-


பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட அமுல்யாவை தேசத்துரோக வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தேசத்துரோக செயலில் ஈடுபட்டவர் நம் நாட்டில் வசிக்க அனுமதிக்கக்கூடாது. சிறையில் இருந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தால் என்கவுண்ட்டர் செய்ய நான் யோசிக்க மாட்டேன். அதுபோல, அமுல்யாவை கொல்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கவும் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். சஞ்ஜீவ் மரடியின் இந்த பேச்சு பெரும்சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அறந்தாங்கியில் 7 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் இரங்கல்
அறந்தாங்கியில் 7 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
2. ஒரு தலைக்காதல்: டிக் டாக் பெண் பிரபலம் கொலை
டிக் டாக்கில் பிரபலமான பெண் ஒருவர் அரியானாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. கழுத்தை நெரித்து கணவனை கொன்று நாடகமாடிய மனைவி; கள்ளக்காதலனுடன் கைது
நாமக்கல் அருகே கணவனின் கழுத்தை நெரித்துக்கொன்று நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
4. கொளத்தூர் அருகே கள்ளக்காதலி எரித்துக்கொலை ; ரவுடி கைது
கொளத்தூர் அருகே கள்ளக்காதலியை எரித்துக்கொன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
5. சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 10 பேர் கைது
சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.