தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் - அறக்கட்டளை உறுப்பினர் தகவல் + "||" + The foundation stone for Ayodhya Rama Temple will be announced next month - Foundation Member Information

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் - அறக்கட்டளை உறுப்பினர் தகவல்

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் - அறக்கட்டளை உறுப்பினர் தகவல்
அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என அறக்கட்டளை உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார்.
அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டு உள்ள ராமஜென்மபூமி தீர்த்த ஸ்தலம் அறக்கட்டளையின் முதல் கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு அயோத்தி திரும்பிய அறக்கட்டளை உறுப்பினர் மகந்த் தினேந்திர தாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ராமஜென்மபூமி தீர்த்த ஸ்தலம் அறக்கட்டளையின் 2-வது கூட்டம் அடுத்த மாதம் (மார்ச்) அயோத்தியில் நடைபெறும். இந்த கூட்டத்தில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டும் தேதி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.


கோவிலுக்கான அடிக்கல் நாட்டுவதற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக கூறிய தினேந்திர தாஸ், பெரும்பாலும் வருகிற நவராத்திரி பண்டிகையின்போது அடிக்கல் நாட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது.அதற்கான பூஜை இன்று நடைபெற்றது.
2. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது - பிரதமர் மோடி அறிவிப்பு
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.