தேசிய செய்திகள்

பஞ்சாபில் முதல்-மந்திரியின் வீட்டுக்கு மின்சார வினியோகத்தை துண்டிப்போம் - ஆம் ஆத்மி மிரட்டல் + "||" + AAP Threatens To Cut Power Supply To Amarinder Singh's Residence

பஞ்சாபில் முதல்-மந்திரியின் வீட்டுக்கு மின்சார வினியோகத்தை துண்டிப்போம் - ஆம் ஆத்மி மிரட்டல்

பஞ்சாபில் முதல்-மந்திரியின் வீட்டுக்கு மின்சார வினியோகத்தை துண்டிப்போம் - ஆம் ஆத்மி மிரட்டல்
பஞ்சாபில் முதல்-மந்திரியின் வீட்டுக்கு மின்சார வினியோகத்தை துண்டிப்போம் என ஆம் ஆத்மி மிரட்டல் விடுத்தது.
சண்டிகார்,

காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் மின் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு வகை செய்யும் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதை நிறைவேற்றாவிட்டால் முதல்-மந்திரி வீட்டுக்கு மின்சார வினியோகம் தடை செய்யப்படும் என ஆம் ஆத்மி கட்சி மிரட்டியுள்ளது.


இதுதொடர்பாக கட்சியின் மாநில தலைவரும், எம்.பி.யுமான பகவந்த் மன் கூறுகையில், ‘தனியார் அனல் மின் நிலையங்களுடன் மாநில அரசு ரகசிய உடன்பாடு செய்துள்ளது. இதனால்தான் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்த பின்னரும் தனியார் மின் நிறுவனங்களின் கணக்கு தணிக்கை விவரங்களை கேட்கவோ, அவர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ இல்லை’ என்று குற்றம் சாட்டினார்.

இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதற்கு முதல்-மந்திரி அமரீந்தர் சிங்கிற்கு பொன்னான வாய்ப்பாக நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் அமைந்திருப்பதாக கூறிய அவர், இந்த தொடரில் மேற்படி ஒப்பந்தங்களை ரத்து செய்யாவிட்டால், அவரது வீட்டுக்கு அடுத்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி மின்சார வினியோகத்தை தடை செய்வோம் என்றும் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் மாநிலத்தில் இன்று 1,741 பேருக்கு கொரோனா
பஞ்சாப் மாநிலத்தில் இன்று 1,741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று
பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. பஞ்சாபில் திருமண நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் - மீறினால் திருமண மண்டப உரிமம் ரத்தாகும் என எச்சரிக்கை
பஞ்சாபில் திருமண நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மீறினால் திருமண மண்டப உரிமம் ரத்தாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. பஞ்சாப்பில் பொதுமுடக்கம் மே 31 வரை நீட்டிப்பு - முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவிப்பு
பஞ்சாபில் பொது முடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
5. பஞ்சாப்பில் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முடிவு : முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாப்பில் ஊரடங்கின் போது, தினமும் 4 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...