தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா? - இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் + "||" + 3000 tonnes of gold in Uttar Pradesh? - Description of the Indian Geological Survey

உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா? - இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம்

உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா? - இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம்
உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா என்பது குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் 3,350 டன் தங்கம் நிலத்தடியில் உள்ளதாக வெளியான செய்தி குறித்து இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

இந்த செய்தி வெளியானதற்கும் புவியியல் ஆய்வு மையத்துக் கும் எந்த தொடர்பும் இல்லை, சோன்பத்ரா மாவட்டத்தில் இது போல் பெரிய அளவு தங்கம் இருப்பதாக புவியியல் ஆய்வு மதிப் பிடவும் இல்லை. நாங்கள் தங்கம் இருப்பு குறித்து பல ஆய்வுகள் நடத்தியுள்ளோம். ஆனாலும் அதன் முடிவுகள் சோன்பத்ராவில் இந்த அளவு தங்கம் இருப்பதை உறுதி செய்யவில்லை. 1998-99 மற்றும் 1999-2000 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் புவியியல் ஆய்வு இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.


அந்த அறிக்கையில், சோன்பத்ரா மாவட்டத்தில் சாத்தியமான தாது 52,806.25 டன் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு டன் தாதுப் பொருளில் சராசரியாக 3.03 கிராம் தங்கம் கிடைக்கும். அதன்படி அங்கு இருக்கும் தாதுப்பொருளில் சுமார் 160 கிலோ தங்கம்தான் கிடைக்கும், ஊடகங்களில் வெளியானதுபோல 3,350 டன் அல்ல என்று அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை 20 நாட்களில் 3 வது சம்பவம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. உத்தர பிரதேசத்தில் அதிகரித்து வரும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடரந்து அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. உத்தரபிரதேசத்தில் சிறுமி கற்பழித்துக்கொலை: எதிர்க்கட்சிகள் கண்டனம்
உத்தரபிரதேசத்தில் சிறுமி ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
4. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. குழந்தையை கடத்தி ரூ. 4 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை 12 மணி நேரத்தில் பிடித்து குழந்தையை மீட்ட போலீசார்
உத்தரப்பிரதேச 6 வயது குழந்தையை கடத்திச் சென்று 4 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலை 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.