உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு எதிரொலி: சீனாவில் ‘மிகப்பெரிய சுகாதார அவசரநிலை’அறிவிப்பு + "||" + Coronavirus is communist China's "biggest health emergency" says Chinese President Xi Jinping

கொரோனா பாதிப்பு எதிரொலி: சீனாவில் ‘மிகப்பெரிய சுகாதார அவசரநிலை’அறிவிப்பு

கொரோனா பாதிப்பு எதிரொலி: சீனாவில் ‘மிகப்பெரிய சுகாதார அவசரநிலை’அறிவிப்பு
கொரோனா பாதிப்பு எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலையை சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.
பெய்ஜிங்,

சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொரோனா (கொவைட்-19) வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,442 ஆக  உயா்ந்துள்ளது. இதுவரை சீனா முழுவதும் கொரோனா (கொவைட்-19) வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 76,936க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பால் சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ள நிலையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவியதையடுத்து கடந்த 1-ம் தேதி உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.