உலக செய்திகள்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,663 ஆக அதிகரிப்பு + "||" + China reports 71 more virus deaths

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,663 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,663 ஆக அதிகரிப்பு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது.

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது.  சீனா மட்டும் அல்லாது உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரானோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. 

 கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரசினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வந்தது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி பலியானோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. எனினும் பலி எண்ணிக்கை அச்சப்படும் அளவிலேயே காணப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 71 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளது.  புதிதாக 508 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்துள்ளது.
2. கொரோனா வைரஸ் பாதிப்பு: முதல் முறையாக அறிக்கை வெளியிட்ட சீனா
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சீனா முதல் முறையாக அறிக்கை வெளியிட்டு உள்ளது.
3. சென்னையில் மொத்தம் 149 பேர் கொரோனாவால் பாதிப்பு
சென்னையில் மொத்தம் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
4. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
5. மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.