தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகளுக்கு பன்றி காய்ச்சல்: தலைமை நீதிபதி அவசர ஆலோசனை + "||" + Swine flu to 5 judges in Supreme Court: Emergency counsel for chief justice

சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகளுக்கு பன்றி காய்ச்சல்: தலைமை நீதிபதி அவசர ஆலோசனை

சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகளுக்கு பன்றி காய்ச்சல்: தலைமை நீதிபதி அவசர ஆலோசனை
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 5 பேருக்கு பன்றி காய்ச்சல் தாக்கி உள்ளது. இதுகுறித்து தலைமை நீதிபதி அவசர ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 5 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் தாக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவை நேற்று நீதிபதிகள் சந்தித்து பேசினர். பன்றி காய்ச்சல் பரவலை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.


அதற்கு தலைமை நீதிபதி, வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் அனைவரும் பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தனது கோர்ட்டு அறையில் வக்கீல்களிடம் இதை தெரிவித்தார். இதன்மூலம், 5 நீதிபதிகளை பன்றி காய்ச்சல் தாக் கிய செய்தி தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேசன் நிர்வாகிகளுடனும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அவசர ஆலோசனை நடத்தினார்.

அடுத்தடுத்து நடந்த இந்த ஆலோசனை கூட்டங்களால், தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு காலை 10.30 மணிக்கு பதிலாக காலை 11.08 மணிக்குத்தான் கூடியது.

மத்திய சுகாதார அமைச்சகம், ‘சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பணிக்கு வந்த 3 நீதிபதிகளுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் 2 நீதிபதிகள் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அவர்கள் உடல்நலம் தேறி வருகிறது’ என தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை விண்ணப்ப அறிவிக்கைக்கும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு
குடியுரிமை விண்ணப்ப அறிவிக்கைக்கும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் தொடர்பில்லை என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
2. 18 முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசியை ஏன் இலவசமாக வழங்க கூடாது? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
18 முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசியை ஏன் இலவசமாக வழங்க கூடாது? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
3. சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷனுக்காக வாதாடிய வக்கீல் ‘திடீர்’ விலகல்
சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷனுக்காக வாதாடிய வக்கீல் மொகித் டி.ராம் அக்குழுவில் இருந்து விலகினார்.
4. மராத்தா சமூகத்தினருக்கான தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கான தனி இடஒதுக்கீடு ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்து உள்ளது.
5. ‘ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது’; சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா மனு
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.