தேசிய செய்திகள்

‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ - ஆக்ரா மேயர் வருத்தம் + "||" + Agra mayor rues not being able to present 'key of Agra' to President Donald Trump

‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ - ஆக்ரா மேயர் வருத்தம்

‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ - ஆக்ரா மேயர் வருத்தம்
டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே என ஆக்ரா மேயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆக்ரா,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேற்று முன்தினம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை பார்வையிட்டு வியந்தனர். டிரம்புக்கு ஆக்ரா மேயர் ‘ஆக்ராவின் சாவி’ என்று அழைக்கப்படும் ஒரு வெள்ளி சாவியை பரிசாக வழங்க திட்டமிட்டு இருந்தார். அந்த 12 அங்குல நீளமுள்ள சாவி வெள்ளியில் செய்யப்பட்டு, அதில் தாஜ்மகால் படமும், ஆக்ரா என்ற பெயரும் செம்பில் செதுக்கப்பட்டு இருக்கும். அதன் எடை 600 கிராம்.


இதுகுறித்து ஆக்ரா மேயர் நவீன் ஜெயின் கூறும்போது, “ஆக்ரா மக்கள் சார்பில் நான் மேயர் என்ற முறையில் இங்கு வந்த டிரம்புக்கு ‘ஆக்ராவின் சாவி’ வழங்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் பாதுகாப்பு தடைகள் காரணமாக டிரம்ப் வந்து இறங்கிய கேரியா விமான தளத்தில் என்னை அனுமதிக்கவில்லை. நாங்கள் அவருக்கு அந்த நினைவு பரிசை வழங்க நினைத்தோம், ஆனால் முடியவில்லையே” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 18 மாதம் சிறை
டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2. டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி
டிரம்புக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை பிரிவுகளை குறிவைத்து தாக்கும்படி தங்கள் நாட்டு கடற்படையினருக்கு ஈரான் ராணுவ தளபதி உசேன் சலாமி உத்தரவிட்டுள்ளார்.
3. டிரம்ப் கூறியபடி கிருமிநாசினியை ஊசி வழியாக செலுத்தாதீர் - முன்னணி நிறுவனம் வேண்டுகோள்
கொரோனா வைரசுக்கு எதிராக டிரம்ப் கூறியபடி கிருமிநாசினியை ஊசி வழியாக செலுத்த வேண்டாம் என்று கிருமிநாசினி தயாரிக்கும் முன்னனி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
4. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும்; டிரம்ப் சூசகம்
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
5. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.