உலக செய்திகள்

பாகிஸ்தானில் இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு + "||" + Pakistan confirms its first two cases of coronavirus

பாகிஸ்தானில் இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

பாகிஸ்தானில் இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
பாகிஸ்தானில் இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
இஸ்லாமாபாத்,

சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது.  சீனா மட்டும் அல்லாது உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரோனா வைரஸ் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.


கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரசினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வருகிறது. நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு  சுகாதாரப்பிரிவின் சிறப்பு உதவியாளர் டாக்டர் ஜாபர் மிர்சா தனது டுவிட்டரில், “ பாகிஸ்தானில் இரண்டு நபர்களுக்கு கொரோனா வைரஸின் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நபர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதால், மக்கள் பீதி அடைய தேவையில்லை” என்று பதிவிட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
2. பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.
3. கொரோனா பாதிப்பு : இந்தியாவைப் போல் பாகிஸ்தானில் ஊரடங்கை அறிவிக்க முடியாது- இம்ரான் கான்
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போல் தன்னால் செயல்பட முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்.
4. பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 7 தொழிலாளர்கள் சாவு
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
5. பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்ந்துள்ளது.