மாநில செய்திகள்

உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: விவசாயி என்றால் மு.க.ஸ்டாலினுக்கு எரிச்சலாக இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு + "||" + Do not insult the workers: MK Stalin is annoyed if he is a farmer -Edapadi Palanisamy Talk

உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: விவசாயி என்றால் மு.க.ஸ்டாலினுக்கு எரிச்சலாக இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு

உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: விவசாயி என்றால் மு.க.ஸ்டாலினுக்கு எரிச்சலாக இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும், விவசாயி என்றால் மு.க.ஸ்டாலினுக்கு எரிச்சலாக இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தஞ்சாவூர், 

தஞ்சாவூரில் வைத்திலிங்கம் எம்.பி. இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்தி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஒரு விவசாயி தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருக்கும் சூழ்நிலையில், விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உச்சநிலையை அடைந்துள்ள வைத்திலிங்கத்தின் மகன் திருமணவிழாவில் முன்னிலை வகிக்கும் பாக்கியத்தை இறைவன் எனக்கு கொடுத்தமைக்கு மகிழ்கின்றேன்.

ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அப்படி எனக்கு ஒரு சந்தர்ப்பம். உங்களால் எனக்கு முதல்-அமைச்சர் என்ற பதவி கிடைத்து இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும், எந்நாளும் எங்களது எண்ணம் தான் வந்து கொண்டு இருக்கிறது. நாள்தோறும் பத்திரிகையில் நாம் விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரே நம்மை விளம்பரப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

நம்மை பற்றி அவர், பேசாத நாள் கிடையாது. அதுவும் விவசாயி என்றால் என்ன எரிச்சல் என்றே தெரியவில்லை. நான் விவசாயி என்று சொன்னால், நீ விவசாயி இல்லை என்கிறார். அதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில். எனது குடும்பம் விவசாய குடும்பம். அப்படி என்றால் விவசாயி என்று தானே சொல்ல முடியும். வேறு என்ன என்று சொல்ல முடியும். இங்கே வந்து இருக்கிற அத்தனை பேரும் விவசாயிகள். உங்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கின்றோம்.

விவசாயி என்று சொன்னாலே தனி பெருமை. அடுத்தவரிடம் கையேந்தி பிழைக்கின்ற கூட்டம் விவசாய கூட்டம் இல்லை என்பதை தனது உழைப்பால் நிரூபிக்கின்ற ஒரே மனிதர்் விவசாயி தான். மற்றவர்கள் எல்லாம் பிறரை நம்பி வாழக்கூடியவர்கள். விவசாயி தான் தனது சொந்தக்காலில் நிற்கிறார்். அப்படி சொந்தக்காலில் நின்று வாழ்கின்றவரை நீ எதிர்த்து போராடி வெல்ல முடியாது.

விவசாயி உழைப்பதற்காக பிறந்தவர். அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு அளிக்க பிறந்தவர். இரவு, பகல் பாராமல் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் உழைக் கின்ற விவசாயியை தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம். பச்சை துண்டு போட்டவர் எல்லாம் விவசாயி ஆக முடியாது என்று ஸ்டாலின் சொல்கிறார்.

பச்சை துண்டு போடுவதற்கே ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி விவசாயிகளுக்கு இருக்கிறது. மணமக்கள் இருவரும் மருத்துவர். மக்களுக்கு சேவை செய்வதற்காக இறைவன் படைத்து இருக்கிறான் என நினைக்கிறேன். எவ்வளவோ பதவிக்கு வரலாம். ஆனால் மருத்துவர் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒரு உயிரை காக்கக்கூடியது மருத்துவத்துறை தான்.

அந்த மருத்துவத்துறையில் இருவரும் பட்டம் பெற்று மருத்துவர்களாக இருந்து மக்கள் சேவை செய்து கொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களை வாழ வைக்கக்கூடிய பணியில் அவர்கள் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பணி சிறக்க, இறைவனை வேண்டி எல்லா வளமும் பெற்று மணமக்கள் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பென்னாகரம் அருகே யானை தாக்கி விவசாயி பலி ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்
பென்னாகரம் அருகே, ஆடு மேய்க்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலியானார்.
2. இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி: அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
3. தலையில் கல்லை போட்டு விவசாயி கொலை 2-வது மனைவியிடம் போலீசார் விசாரணை
தர்மபுரி அருகே ரெயில் தண்டவாளத்தில்பிணமாககிடந்தவிவசாயி சாவில் திடீர் திருப்பமாக அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாகஅவருடைய 2-வது மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. 68-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி வாழ்த்து - நலத்திட்ட உதவிகள் வழங்கி தி.மு.க.வினர் கொண்டாடினர்
மு.க.ஸ்டாலினின் 68-வது பிறந்தநாளையொட்டி, ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நலத்திட்ட உதவிகள் வழங்கி அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர் கொண்டாடினர்.
5. விவசாயியாக மாறிய டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தற்போது விவசாயியாக மாறி உள்ளார்.