தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர் + "||" + 119 indians 5 foreigners from coronavirus hit cruise ship land in delhi on ai flight

கொரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பலில் பயணித்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்.
டோக்கியோ,

ஜப்பானுக்கு சொந்தமான 'டைமண்ட் பிரின்சஸ் சொகுசுகப்பலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அவர்களில், 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், கப்பல் தனிமை படுத்தப்பட்டது.  இதை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் 500 பேருக்கு கொரானா பாதிப்பு இருந்தால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 14 நாட்களுக்கு பிறகு கப்பலில் இருந்து வெளியேறினர். 

இந்த நிலையில், டைமன்ட் பிரின்ஸ் கப்பலில் பயணித்த இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய தூதரகம் இறங்கியது. இதன் முயற்சியாக, 5 வெளிநாட்டு பயணிகள் உள்பட 116 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று டெல்லி விமான நிலையம் வந்தது.

இந்தக் கப்பலில் பயணித்த   16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் ஜப்பானில் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை!
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
2. கொரோனா பாதிப்பு: சர்வதேச நாடுகளில் 70% ஹைட்ரோகுளோரோகுயின் தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது
சர்வதேச நாடுகளில் 70 சதவீத ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்சன் ஜெயின் தெரிவித்துள்ளார்.
3. 100 அதிவேக ரயில்கள், 200 விமானங்கள் தயார் -உகான் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள்
100 அதிவேக ரயில்கள், 200 விமானங்கள் தயார் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் உகான் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கபோகிறார்கள்.
4. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? கரையும் கையிருப்பு... ஏங்க வைக்கும் எதிர்பார்ப்பு
ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மக்களின் கையிருப்பு வேகமாக கரைந்து வருகிறது.
5. மராட்டியத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,078 ஆக உயர்ந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...