தேசிய செய்திகள்

கேரளாவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் சாவு - கொரோனா வைரசால் இறந்தாரா? + "||" + Death in hospital in Kerala - Is the coronavirus dead?

கேரளாவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் சாவு - கொரோனா வைரசால் இறந்தாரா?

கேரளாவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் சாவு - கொரோனா வைரசால் இறந்தாரா?
கேரளாவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர், கொரோனா வைரசால் இறந்தாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
கொச்சி,

சீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா வைரஸ் பரவியதால், அங்கு இருந்த இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வந்தது. இதில் கேரளாவை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது. நாட்டிலே முதல் முறையாக கேரளாவை சேர்ந்தவர்களுக்கு இந்நோய் தாக்கியதாக அறிவிக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஜெய்நேஸ் மலேசியாவில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு விமானம் மூலம் கேரளாவுக்கு வந்தார். அவர் வந்த விமானம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது அவர் சோர்வாக இருந்தார். மேலும் அவருக்கு தொடர்ந்து இருமல் இருந்தது.

இதைத்தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த அதிகாரிகள் தலமச்சேரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தனிமை படுத்தப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு நிமோனியா, சர்க்கரை நோய் உள்ளிட்ட பலநோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் கொரோனோ வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். அவர் கொரோனா வைரசால் இறந்தாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் குணம் அடைந்து வருகிறார் - மருத்துவமனை தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் குணம் அடைந்து வருகிறார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
2. கேரளாவில் 488 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் 488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
3. கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு
கேரளாவை உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
5. கேரளாவில் இன்று மேலும் 301 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று புதிதாக 301 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.