மாநில செய்திகள்

“தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவி தருவதாக வாக்குறுதி கொடுக்கவில்லை” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + "||" + Minister Jayakumar Interview

“தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவி தருவதாக வாக்குறுதி கொடுக்கவில்லை” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

“தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவி தருவதாக வாக்குறுதி கொடுக்கவில்லை”  அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவி தருவதாக அ.தி.மு.க. வாக்குறுதி கொடுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை, 

சென்னை தரமணியில் நடைபெற்ற ‘தமிழ்த்தாய்-72’ என்ற தலைப்பில் நடைபெற்ற தமிழாய்வு பெருவிழாவில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி அளிப்பதாக அ.தி.மு.க. எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. பா.ம.க.வுக்கு மட்டுமே எம்.பி. பதவி தருவதாக ஒப்பந்தம் செய்து இருந்தோம். தே.மு.தி.க.வுக்கு எம்.பி. சீட் ஒதுக்குவது பற்றி அ.தி.மு.க. தலைமைக்கழகம் முடிவு செய்யும். இது கட்சியின் கொள்கை முடிவு, தனிப்பட்ட நபர் முடிவு இல்லை.

நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டார். அவரது நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

தி.மு.க. மீது குற்றச்சாட்டு

நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன்பிறகு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் சேருவதும், சேராததும் அவர்களது ஜனநாயக உரிமை. அவர்கள் சேர்ந்து நின்றால் தங்களுக்கு பாதிப்பா? இல்லையா? என்று தி.மு.க. வேண்டுமானால் கவலைப்படலாம். ஆனால், 1½ கோடி தொண்டர்களை கொண்டுள்ள எங்கள் இயக்கத்தின் வாக்கு வங்கியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு கிடையாது. குரூப்-1 தேர்வு முறைகேட்டில் ஆளுங்கட்சிக்கு தொடர்பு இருப்பதாக முரசொலியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்மீது வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசியலில் இல்லாத ரஜினி-கமல் எப்படி இணைவார்கள்? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அரசியலில் இல்லாத நடிகர் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இருவரும் எப்படி இணைவார்கள்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
2. தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்காது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.