தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ள ஈரான் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை - மத்திய அரசு தகவல் + "||" + Corona virus in the grips of Indians recover from the Iran action - Central Government Information

கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ள ஈரான் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை - மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ள ஈரான் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை - மத்திய அரசு தகவல்
கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ள ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுடெல்லி,

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி வைரஸ் கொரோனா, 40-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி உள்ளது. அந்த வகையில் ஈரான் நாட்டிலும் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

அங்கு இந்த வைரசுக்கு புதிதாக 11 பேர் பலியாகி இருப்பதாகவும், 385 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் ஈரான் சுகாதார அமைச்சகம் நேற்று கூறியது.


இதன்மூலம் ஈரானில் இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 54 ஆகவும், பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 978 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஈரானில் மீன்பிடிக்க சென்ற 900 இந்திய மீனவர்கள் தவிப்பதாகவும், அவர்களில் 700 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

இப்போது காஷ்மீரை சேர்ந்த 240 மாணவர்கள், ஈரானில் உள்ள சிராஸ், டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் படித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக ஈரானில் தவிக்கிற இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

இதையொட்டி மத்திய வெளியுறவு ராஜாங்க மந்திரி வி.முரளதரன் கூறும்போது, “கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில் மீனவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ஈரானில் சிக்கியுள்ளதாக மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், இது தொடர்பாக நிலைமையை மதிப்பீடு செய்து. உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகிறது” என கூறினார்.

இதற்கிடையே டெஹ்ரானில் உள்ள இந்திய தூதர் கடாம் தர்மாதிகாரி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், நாடு திரும்ப விரும்பும் இந்தியர்கள் திரும்பி வருவதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தருவது நிறுத்தம்: உலக சுகாதார நிறுவனம் அதிரடி முடிவு
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தந்து சோதிப்பதை நிறுத்தி வைத்து உலக சுகாதார நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
2. கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை: அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை செய்ய அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் பிரேசிலில் இருந்து அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. டெல்லியில் புதிதாக 635 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் புதிதாக 635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.