மாநில செய்திகள்

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பொருளாதார சரிவை திசை திருப்பவே மதவாத அரசியல் செய்கிறார்கள் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு + "||" + Prime Minister Modi and Amit Shah do religious politics to deflect economic slump - KS Alagiri

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பொருளாதார சரிவை திசை திருப்பவே மதவாத அரசியல் செய்கிறார்கள் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பொருளாதார சரிவை திசை திருப்பவே மதவாத அரசியல் செய்கிறார்கள் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பொருளாதார சரிவை திசை திருப்ப மதவாத அரசியல் செய்வதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை, 

இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வேன் என்று வாக்குறுதி கொடுத்து அமோக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியில் அமர்ந்த நரேந்திரமோடி அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலமாக மக்களை மதரீதியாக பிளவு படுத்துகிற அரசியலை செய்து வருகிறார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின்படி இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதற்கு மாறாக படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. மக்களிடையே வாங்கும் சக்தி இல்லை, முதலீடுகள் இல்லை, வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர்கள் வேலை இழப்பு என அனைத்து நிலைகளிலும் இந்திய பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கிறது.

இதன்மூலம் எழுகிற கடுமையான விமர்சனங்களை திசை திருப்புவதற்காக மதவாத அரசியலை தீவிரப்படுத்தி, செயல்படுத்தி வருகிற மோடி-அமித்ஷா கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிற காலம் மிக தொலைவில் இல்லை. இதன் மூலம் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு உரிய பாடம் கற்பிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்.
2. ‘மன் கி பாத்’: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
3. “கோவிஷீல்டு தடுப்பூசி” பணிகளை 28-ம் தேதி ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி
புனேவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பணிகளை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
4. ஒரு நாடு, ஒரு தேர்தல் என்பது விவாதத்திற்குரிய விஷயமல்ல, இது இந்தியாவின் தேவை - பிரதமர் மோடி
இன்றளவும் நாட்டில் மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற சம்பவம் நடக்காமல் பாதுகாத்து வரும் வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
5. 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.