தேசிய செய்திகள்

தம்பதிக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி: 21 இத்தாலி சுற்றுலா பயணிகள் தனிமை முகாமுக்கு அனுப்பப்பட்டனர் + "||" + Corona impact echoes for the couple: 21 Italy tourists were sent to a detention camp

தம்பதிக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி: 21 இத்தாலி சுற்றுலா பயணிகள் தனிமை முகாமுக்கு அனுப்பப்பட்டனர்

தம்பதிக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி: 21 இத்தாலி சுற்றுலா பயணிகள் தனிமை முகாமுக்கு அனுப்பப்பட்டனர்
தம்பதிக்கு கொரோனா பாதிப்பு எதிரொலியாக, 21 இத்தாலி சுற்றுலா பயணிகள் தனிமை முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
புதுடெல்லி,

இத்தாலியில் இருந்து 13 பெண்கள் உள்பட 21 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அனைவரும் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தனர்.

இத்தாலி சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என அவர்களின் ரத்த மாதிரிகள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பரிசோதிக்கப்பட்டது. அதில், சுற்றுலா வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது மனைவிக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.


இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் 21 பேர் மற்றும் இந்திய சுற்றுலா வழிகாட்டிகள் 3 பேர் டெல்லியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படையால் பராமரிக்கப்படும் தனிமை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த மையத்தில் ஏற்கனவே 36 வெளிநாட்டினர் உள்பட 112 பேர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நேபாளத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 675- ஆக உயர்வு
நேபாளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
3. கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்ந்துள்ளது.
4. மே.வங்காளத்தில் அம்பன் புயலால் கடும் சேதம்- 12 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்காளத்தில் நேற்று கரையைக் கடந்த அம்பன் புயல் கடும் சேதங்களை ஏற்படுத்திச் சென்றுவிட்டது.
5. ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது
ரஷியாவில், கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது.