தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 5 வெளிநாட்டு பயணிகள் வெளியேற்றம் + "||" + The eviction of 5 foreign travelers who fought against the Citizenship Act

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 5 வெளிநாட்டு பயணிகள் வெளியேற்றம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 5 வெளிநாட்டு பயணிகள் வெளியேற்றம்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 5 வெளிநாட்டு பயணிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து இருந்த 5 பயணிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக புகார் எழுந்தது.


இதுகுறித்து விசாரணை நடத்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் விசா விதிமுறைக்கு மாறாக செயல்பட்டதாக கூறி அவர்கள் 5 பேரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டனர்.

நாடாளுமன்ற மக்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த்ராய், இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.