தேசிய செய்திகள்

டெல்லி கலவரம்: சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல் + "||" + Delhi riots: Continuous monitoring of social websites - Central Ministerial Information in Parliament

டெல்லி கலவரம்: சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

டெல்லி கலவரம்: சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
டெல்லி கலவரம் தொடர்பாக, சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக, நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் ஏராளமானோர் பலியானார்கள்.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.


அதில், ‘தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க டெல்லி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டெல்லி கலவரம் தொடர்பாக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வதந்தி மற்றும் போலி பிரசாரம் செய்வதை அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை விசாரணை அதிகாரிகள் ஆய்வுசெய்து கலவரம் ஏற்படுத்தியவர்களை கைது செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதியில் 7,600 மத்திய ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்’ என கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி கலவரம் குறித்த காட்சிகளை வெளியிட்டது டெல்லி போலீஸ்
டெல்லி கலவரம் குறித்த காட்சிகளை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது.
2. டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் புலனாய்வு குழு அமைக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
3. டெல்லி கலவரம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
டெல்லி கலவரம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிருபர்களிடம் கூறியதாவது:-
4. டெல்லி கலவரம் எதிரொலி: பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை
டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய சோனியா காந்தி போர்க்கொடி
டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவர் விமர்சித்தார்.