தேசிய செய்திகள்

தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு: மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை - மந்திரி தகவல் + "||" + National Population Record Preparation: Federal Government Consultation with States - Ministerial Information

தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு: மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை - மந்திரி தகவல்

தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு: மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை - மந்திரி தகவல்
தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு தொடர்பாக மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
புதுடெல்லி,

என்.பி.ஆர். என்று அழைக்கப்படக்கூடிய தேசிய மக்கள்தொகை பதிவேட்டை நாடு முழுவதும் தயாரிக்க மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு, முடிவு செய்துள்ளது.

இதற்கு பரவலாக எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இதில் அச்சம் வெளியிட்டுள்ளன; விமர்சித்தும் வருகின்றன.


கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிப்போம், ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என அறிவித்துள்ளன.

ஆனாலும்கூட, இந்த தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்பு பணியை ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 30-ந் தேதி வரை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

இதையொட்டி நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணியில் கவலை கொண்டுள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பின்போது, ஒவ்வொரு குடும்பம் மற்றும் தனிநபர்களின் புள்ளி விவரங்கள் புதுப்பிக்கப்படும். தகவல்கள் சேகரிக்கப்படும்.

பொதுமக்களிடம் இருந்து எந்தவொரு ஆவணமும் பெறப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந் தேதி வரையில் வீடுகள் பட்டியலிடும்போது, தேசிய மக்கள் தொகை பதிவேடு தகவல்கள் சேகரிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பணியை தலைமை பதிவாளரும், மக்கள் தொகை கமிஷனருமான விவேக் ஜோஷி மேற்பார்வையிடுவார்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்த தகவல்களை வீடு, வீடாகச்சென்று பெறுகிறபோது, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை பற்றிய தகவல்களும் சேகரிக்கப்படும், ஆனால் ‘பான்’ என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை தொடர்பான தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது என தகவல்கள் கூறுகின்றன.

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.3,941 கோடி ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி தயாரிப்பை தொடங்கும் முன்னணி நிறுவனம்: 200 கோடி ’டோஸ்’ உற்பத்தி செய்ய இலக்கு
கொரோனாவுக்கான தடுப்பூசியை முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளது. அதில் 200 கோடி ’டோஸ்’ உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்ட்டுள்ளது.
2. நாள்தோறும் 1 கோடி முக கவசம் தயாரிப்பு: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
நாள்தோறும் 1 கோடி முக கவசம் தயாரிக்கப்பட்டு வருவதாக, மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.