மாநில செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் சென்ற 68¾ லட்சம் பேர் மீது வழக்கு - ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் + "||" + Case filed against 68¾ lakhs of people who went without helmets

ஹெல்மெட் அணியாமல் சென்ற 68¾ லட்சம் பேர் மீது வழக்கு - ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

ஹெல்மெட் அணியாமல் சென்ற 68¾ லட்சம் பேர் மீது வழக்கு - ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்
ஹெல்மெட் அணியாமல் சென்ற 68¾ லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணியவேண்டும். கார் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணியவேண்டும் என்ற மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளை தீவிரமாக அமல்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் ஜவஹர், தமிழக போலீஸ் சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி. சாம்சன் ஆகியோர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தமிழகம் முழுவதும் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் முதல் கடந்த ஆண்டு நவம்பர் வரை ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்றதாக 68 லட்சத்து 76 ஆயிரத்து 452 பேர் மீதும், ‘சீட் பெல்ட்’ அணியாமல் சென்றதாக 15 லட்சத்து 90 ஆயிரத்து 382 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 291 பேர் மீதும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன் படுத்தியதாக 4 லட்சத்து 63 ஆயிரத்து 543 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் கடந்த 2016-ம் ஆண்டை ஒப்பிடுகையில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணம் 38 சதவீதமாக குறைந்துள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தமிழகத்துக்கான ரூ.12,250 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட கோரிய வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
2. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
3. திருச்சியில் வீட்டோடு மாப்பிள்ளையாக மறுத்த வாலிபரின் மண்டை உடைப்பு மாமனார், மாமியார் மீது வழக்கு
வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க மறுத்ததால், புதுமாப்பிள்ளையின் மண்டை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. கொரோனா விதியை மீறியதாக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்கு
கொரோனா விதியை மீறி கூட்டத்தை கூட்டியதாக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முக்கிய தடயங்களை ஆய்வு செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...