மாநில செய்திகள்

இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் ஆலோசனை + "||" + Indian-2 shooting accident: Counsel for the police Send Notices For actress Kajal Agarwal

இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் ஆலோசனை

இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் ஆலோசனை
இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு ஆஜராக, நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
சென்னை, 

நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்படிபிப்பு கடந்த பிப்ரவரி 19-ந் தேதி பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் இடத்தில் நடந்தபோது கிரேன் சாய்ந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இதுகுறித்து கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் சுந்தரராஜன் ஆகியோர் மீது நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர். இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோரிடம் பல மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், தயாரிப்பு மேலாளர் சுந்தரராஜனை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். 

இதையடுத்து அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மீது பதிவான வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடியவை ஆகும். எனவே, அவர் கீழ் கோர்ட்டை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பான வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.