மாநில செய்திகள்

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது + "||" + Tamil Nadu assembly to meet tomorrow

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது
தமிழக அரசுத் துறைகளின் மானிய கோரிக்கை பற்றி விவாதிக்க சட்டசபை நாளை கூடுகிறது.
சென்னை, 

தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த மாதம் 14-ந் தேதி தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீது 4 நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

பட்ஜெட்டை தொடர்ந்து, அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைக்கான கூட்டத்தை நடத்துவது பற்றிய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் 2-ந் தேதி சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடந்தது.

அந்தக் கூட்டத்தில், 9-ந் தேதி (நாளை) முதல் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ந் தேதிவரை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், எந்தத் துறைகளின் மானியக் கோரிக்கை எந்த தேதியில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றியும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத் தொடரின் முதல் நாளான நாளை (திங்கட்கிழமை) எம்.எல்.ஏ.க்கள் காத்தவராயன், கே.பி.பி.சாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும், முன்னாள் எம்.எல்.ஏ. ப.சந்திரன் மறைவுக்கு இரங்கல் குறிப்பும் தெரிவிக்கப்படும். முன்னாள் அமைச்சர் க.அன்பழகனின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படும். அதன்பின்னர் சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படும்.

10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சட்டசபை கூட்டம் இல்லை. பின்னர் 11-ந் தேதியில் இருந்து வழக்கம்போல சட்டசபை கூட்டம் நடைபெறும். 23 நாட்கள் நடக்கும் கூட்டத் தொடரில் தினமும் காலை 10 மணிக்கு சட்டசபை கூடும். ஒவ்வொரு அரசுத் துறைகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டிய நிதி மற்றும் அந்தத் துறைகளின் திட்டங்கள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம், அந்தந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாதிப்பு இல்லை
கொரோனா பரிசோதனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.