மாநில செய்திகள்

பெரியார் பற்றி பேச்சு: ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு + "||" + Talk about Periyar: Petition to file a case against Rajinikanth Dissmissed - Egmore Court Order

பெரியார் பற்றி பேச்சு: ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு

பெரியார் பற்றி பேச்சு: ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
பெரியார் பற்றி பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

சென்னை எழும்பூர் 2-வது குற்றவியல் கோர்ட்டில், நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலைக்கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘சென்னை திருவல்லிகேணியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் பற்றி சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் விதமாகவும் உள்ளது.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153 (இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசுதல்) 504 மற்றும் 505 (கோபத்தை தூண்டும் விதமாகவும், வெறுக்கத்தக்க வகையில் பேசுதல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ரோஸ்லின் துரை விசாரித்தார். அப்போது, ஆறுமுகம் என்பவர் தன்னை இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘ரஜினிகாந்தை இந்த வழக்கில் குற்றவாளியாக குறிப்பிட்டு, 3-வது எதிர் மனுதாரராக மனுதாரர் சேர்த்தது சட்டப்படி தவறாகும்’ என்று கூறியிருந்தார்.

மனுதாரர் சார்பில் வக்கீல் கான்சியஸ் இளங்கோ, இடையீட்டு மனுதாரர் சார்பில் வக்கீல் நமோ நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ரோஸ்லின் துரை நேற்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. அவர் தெரிவித்த கருத்து, அவதூறாக மனுதாரர் கருதினால், நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை தனி நபர் வழக்காக தொடரலாம்.

எனவே, ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. போதைப்பொருள் கும்பலுக்கு உதவிய சதாசிவநகர் போலீஸ் நிலைய ஏட்டு கைது மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
போதைப்பொருள் கும்பலுக்கு உதவியதாக பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலைய ஏட்டுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
2. கேரள தங்க கடத்தல் வழக்கு; முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் ஜாமீன் மனு தள்ளுபடி
கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திரியின் முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
3. சாத்தான்குளம் மகேந்திரன், தட்டார்மடம் செல்வன் மரண வழக்கு: விசாரணை அறிக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல்
சாத்தான்குளம் வாலிபர் மகேந்திரன், தட்டார்மடம் செல்வன் ஆகியோர் மரண வழக்கு விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
4. கோவையில் தமிழ்நாடு தினவிழா கொண்டாட்டம் தனிக்கொடி ஏற்றிய நாம் தமிழர் கட்சியினர் 4 பேர் மீது வழக்கு
கோவையில் தமிழ்நாடு தினவிழா கொண்டாடப்பட்டது. இடிகரையில் தனிக்கொடி ஏற்றியதாக நாம் தமிழர் கட்சியினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மீது வழக்கு
அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கூட்டு குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.