தேசிய செய்திகள்

இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய 45 பேர் தனிமையில் கண்காணிப்பு + "||" + In Tracking 45 individuals returning from Italy to Kerala

இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய 45 பேர் தனிமையில் கண்காணிப்பு

இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய 45 பேர் தனிமையில் கண்காணிப்பு
இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொச்சி,

கேரளாவை சேர்ந்த 45 பேர், நேற்று முன்தினம் இத்தாலியில் இருந்து விமானத்தில் கொச்சிக்கு வந்து சேர்ந்தனர். அவர்களிடம் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 10 பேருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் காணப்பட்டது. அதனால் அவர்கள் கலமசேரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.


2 குழந்தைகள், 2 கர்ப்பிணிகள் உள்பட 35 பேர், அலுவாவில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அறிகுறி இல்லாததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இருப்பினும், அவரவர் வீட்டில் 28 நாட்களுக்கு தனிமையில் இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உரிய வழிமுறைகளை பின்பற்றுவதாக அவர்களிடம் எழுத்துமூலம் உத்தரவாதம் பெறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகில் 6-வது இடத்தில் இந்தியா: கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பு 2,36,657 ஆக உயர்வு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,36,657 ஆக உயர்ந்ததை தொடர்ந்து, இத்தாலியை பின்னுக்கு தள்ளிவிட்டு உலக அளவிலான பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது.
2. இத்தாலியில் உள்நாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்
இத்தாலியில் உள்நாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
3. ஜோர்டானில் இருந்து கேரளா திரும்பிய நடிகர் பிருத்விராஜ் மற்றும் படக்குழு
ஜோர்டானில் சிக்கியிருந்த நடிகர் பிருத்விராஜ் மற்றும் அவரது படக்குழுவினர், கொச்சிக்கு விமானம் மூலம் வந்தடைந்தனர்.
4. இத்தாலியில் கொரோனா தாக்கம் குறைகிறது
இத்தாலியில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து வருகிறது.
5. இத்தாலியில் 2 மாத ஊரடங்கு முடிவுக்கு வந்தது
இத்தாலியில் சுமார் 2 மாதம் அமலில் இருந்த ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது.