மாநில செய்திகள்

விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Nalini's petition of Release dismissed - High Court directive

விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
சட்டவிரோதமாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுபற்றி கவர்னர் பன்வாரிலால் புரோகித் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்து வருகிறார்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் நளினி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘அமைச்சரவை எங்களை முன்கூட்டியே விடுவிக்க பரிந்துரை செய்த மறுகணமே, அதனை கவர்னர் அரசியலமைப்பு சட்டரீதியாக ஏற்றுக்கொண்டு, எங்களை விடுவிக்க உத்தரவிட்டு இருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்காத சூழலில், நாங்கள் சிறைக்குள் சட்டவிரோத காவலில் உள்ளதாகவே கருத வேண்டும். எனவே சட்டவிரோதமாக சிறைக்குள் உள்ள என்னை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்தனர். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், தமிழக அரசு சார்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தனர். அதில், ‘நளினி, முருகன் உள்பட 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சட்டரீதியாக சிறைக்குள் இருக்கும் இவர், சட்டத்துக்கு புறம்பாக சிறைக்குள் இருப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது.

நளினி உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுவிக்க தமிழக அமைச்சரவை இயற்றிய தீர்மானத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அது சட்டரீதியாக செல்லும். அமைச்சரவையின் பரிந்துரையை காரணம் காட்டி தன்னை விடுவிக்க வேண்டும் என்று மனுதாரர் கேட்க முடியாது. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரின் தாய் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. போலி சான்றிதழ் மூலம் பெட்ரோல், கியாஸ் நிலையங்கள்: போலீசாருக்கு ஆவணங்களை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
போலி சான்றிதழ் மூலம் பெட்ரோல், கியாஸ் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தும் போலீசார் கேட்கும் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு முட்டை வழங்க பரிசீலிக்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு முட்டை வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
4. எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் சச்சின் பைலட் கேவியட் மனு தாக்கல்
ராஜஸ்தானில் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரத்தில் சச்சின் பைலட் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
5. சச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க ஜூலை 24ந்தேதி வரை தடை; ராஜஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு
ராஜஸ்தானில் சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜூலை 24ந்தேதி வரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.