உலக செய்திகள்

அமெரிக்க ராணுவம் தான் வுகானுக்கு கொரோனாவை கொண்டு வந்தது - சீனா குற்றச்சாட்டு + "||" + US military brought Corona to china - China alleges

அமெரிக்க ராணுவம் தான் வுகானுக்கு கொரோனாவை கொண்டு வந்தது - சீனா குற்றச்சாட்டு

அமெரிக்க ராணுவம் தான் வுகானுக்கு கொரோனாவை கொண்டு வந்தது - சீனா குற்றச்சாட்டு
அமெரிக்க ராணுவம்தான் வுகானுக்கு கொரோனாவை கொண்டு வந்திருக்கவேண்டும் என சீனா குற்றம் சாட்டி உள்ளது.
பீஜிங்

கொரோனா வைரஸ் நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை கெடுத்துவருகிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ காரணம் இந்த நாடுதான் என, மற்றொரு நாட்டை சுட்டிக்காட்டி வருகின்றன. எங்கள் நாட்டில் கொரோனா பரவ ஜெர்மனிதான் காரணம் என  இத்தாலி கூறியது.

அமெரிக்க ராணுவம்தான் தங்கள் நாட்டுக்குள் கொரோனாவைக் கொண்டுவந்தது என சீன செய்தி தொடர்பாளர்  குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ராபர்ட் ஓ பிரைன், சீனா வுகானில் இருந்து பரவிய கொரோனாவை தடுக்க சரியான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கு பதிலாக, அதை மூடி மறைப்பதிலேயே கவனம் செலுத்தியது.

அதனால், கொரோனாவை எதிர்கொள்வதற்கு உலகம் இரண்டு மாதங்களை செலவிடவேண்டியதாயிற்று என்றார். சீனாவிலும் உலகத்திலும் தற்போது நடக்கும் இந்த பயங்கரத்தை, அந்த இரண்டு மாதங்களுக்குள் பெருமளவில் குறைத்திருக்கலாம், கட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம் என்றார் ஓ பிரைன் 

சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லிஜியன் ஜாவோ அமெரிக்கா தான் ஒளிவு மறைவில்லாமல் இருந்தது  என அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

லிஜியன் ஜாவோ கூறியதாவது:-

சில மூத்த அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறிய பல்வேறு தவறான மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் வைரஸின் மூலத்தைப் பற்றி வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளது. இது ஒரு விஞ்ஞான பிரச்சினை என்று சீனா எப்போதும் நம்புகிறது மற்றும் அறிவியல் மற்றும் தொழில்முறை ஆலோசனை தேவை.

எப்போது அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எந்த மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்க ராணுவம்தான் வுகானுக்கு கொரோனாவையே கொண்டு வந்திருக்கவேண்டும்.

இதற்கு  விளக்கம் கொடுங்கள் என சுடச்சுட தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிகாரிகள் இப்படி கருத்துச் சொல்லிக்கொண்டிருப்பது எந்த வகையிலும் கொரோனா பரவுவதை தடுக்க உதவாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்
ஹாங்காகங்கில் உள்ள 30 லட்சம் குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதனால் சீனா கோபம் கொண்டுள்ளது.
2. ஜி 7 உச்சி மாநாடு: டிரம்ப் அழைப்பை நிராகரித்த ஏஞ்சலா மெர்க்கல்
அமெரிக்காவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அழைப்பை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையே சமீபத்தில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை -தகவல்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையே சமீபத்தில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளது.
4. உலகில் கொரோனா பாதிப்பு தரவரிசையில் இந்தியாவுக்கு 9-வது இடம்; மரணங்களில் சீனாவை முந்தியது
உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது, இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தி உள்ளது.
5. சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை - டொனால்டு டிரம்ப்
சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி "நல்ல மனநிலையில்" இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.