மாநில செய்திகள்

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருக்கே தெரியாது - நடிகர் வடிவேலு சொல்கிறார் + "||" + Is Rajinikanth Party Started? Is not it? Actor Vadivelu says he does not know

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருக்கே தெரியாது - நடிகர் வடிவேலு சொல்கிறார்

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருக்கே தெரியாது - நடிகர் வடிவேலு சொல்கிறார்
‘ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருக்கே தெரியாது’ என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த, நடிகர் வடிவேலு ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தது குறித்து...

பதில்:- திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி கும்பிடுவது பெரிய பாக்கியம். எல்லா கோவில்களை விடவும் மிகப்பெரிய சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இருக்கிறது. என்னுடைய நகைச்சுவை சஞ்சீவி மருந்து. அப்படிப்பட்ட மருந்தை வழங்கும் நான் கெட்டவன் கூட நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனாலும் எனக்கு திரை உலகில் ஏராளமான கெடுதல் செய்கிறார்கள். அதை என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை. சொல்லவும் கூடாது. எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார். மக்களை சிரிக்க வைக்கும் எனக்கே இந்த கதி என்றால், ‘சீரியஸாக’ இருப்பவர்களுக்கு எவ்வளவு இம்சை இருக்கும். முருகனை வழிபடுவதால் எனக்கு பெருமை, பாக்கியம் கிடைத்திருக்கிறது.

கேள்வி:- கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்?

பதில்:- கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ‘ஐயா’ படத்திலேயே நான் ஏற்படுத்திவிட்டேன். எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் கைகூப்பி வணக்கம் சொல்வார். பொதுவாக அனைவரும் தூரமாக விலகியே இருக்கவேண்டும். நமது சாப்பாடு முறை வேறு. சீனாக்காரர்களின் சாப்பாடு முறை வேறு. பூண்டு உள்ளிட்ட நம்முடைய உணவு முறை எந்த நோயையும் முறியடித்துவிடும். இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கேள்வி:- குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- கருத்து சொல்ல வாய்ப்பு இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை புரிந்து கொண்டவர்கள், புரியட்டும். புரியாதவர்கள் விட்டுவிட வேண்டும். அவ்வளவு தான். சொல்லப்போனால் எனக்கும் இன்னும் புரியவில்லை.

கேள்வி:- நடிகர் சங்கத்தில் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்தீர்கள்...

பதில்:- சங்கத்தை கலைங்கடா? என்று வின்னர் படத்தில் சொன்னேன். அதான் முடிச்சுக்கோங்க. சங்கத்தை கலைத்துவிட்டு போகவேண்டியது தான்.

கேள்வி:- நடிகர் கமல்ஹாசன் இளைஞர்களுக்கு தேர்தலில் ‘சீட்’ வழங்கினார். அதேபோல் ரஜினிகாந்தும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாது. இறைவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர் ஒரு நல்ல மனிதர். நன்றாக யோசிக்கக்கூடியவர். அவர் எடுத்து இருக்கும் முடிவு மக்களுக்கு நன்மையாகவே இருக்கும். அவர் மாதிரி புத்திசாலியை பார்க்க முடியாது. என் அண்ணன் நடிகர் கமல்ஹாசனும் அறிவாளி தான். அவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள். சீமானுக்கும், ரஜினிக்கும் சண்டை என்று சொல்கிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். சீமான் எனக்கு பங்காளி. ரஜினிகாந்த், கமல்ஹாசன் என் அண்ணன்கள். எல்லாம் சினிமாக்காரர்கள் தான். சண்டைக்கு வாய்ப்பே இல்லை. எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டை நல்ல படியாக கொண்டு வந்துவிடுவார்கள். தமிழ்நாட்டை காப்பாற்ற யார்? யாரெல்லாம் இறங்குகிறார்களோ? அவர்கள் பக்கம் நான் நிற்பேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்சி, ஆட்சி அதிகாரத்தில் 2 பேர் ஆதிக்கம் ஏன்?" பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி
பெரும்பான்மை மக்களின் ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் 2 பேர் ஆதிக்கமே மேலோங்கியும், மற்றவர்கள் எல்லாம் அதிகாரமற்றும் இருப்பது ஏன் என ஆளும் பா.ஜ.க. விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
2. நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார்
நடிகர்கள் சிங்க முத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் வடிவேலு பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
3. என்ன பேசினார் ரஜினிகாந்த்? கட்சி தொடங்குவாரா ...! அரசியலுக்கு வருவாரா...! மீண்டும்... !!!
ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றி முதல் முறையாக வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
4. கட்சி வேற.. ஆட்சி வேற... என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும்- ரஜினிகாந்த்
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்கிற முழக்கத்தோடு மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களை சந்திக்க வேண்டும் என ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது அரசியலில் ஒரு வியூகம் தான் ; உண்மையான வியூகம்- ரஜினிகாந்த்
முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது அரசியலில் ஒரு வியூகம் தான் ; உண்மையான வியூகம் என ரஜினிகாந்த் கூறினார்.