மாநில செய்திகள்

பூத கண்ணாடி வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. அரசில் குறை காண முடியாது மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு + "||" + Edapady Palanisamy Speech at Medical College Foundation

பூத கண்ணாடி வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. அரசில் குறை காண முடியாது மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

பூத கண்ணாடி வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. அரசில் குறை காண முடியாது  மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
மு.க.ஸ்டாலின் பூத கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. அரசில் குறை காண முடியாது என்று மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகே ஒடுக்கத்தில் ரூ.327 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மேலும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மக்கள் நலனில் அக்கறை

அ.தி.மு.க. அரசு தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறையோடு உள்ளது. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்ற ஒரே அரசு, அ.தி.மு.க. அரசு தான். மக்களின் உடல்நலத்தை பேணுவதற் கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துகிறோம்.

உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்காக 5 முறை தமிழக அரசு விருது பெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் போடிகாமன்வாடி வாலிபர் நாராயணசாமி விபத்தில் 2 கைகளை இழந்தார். அவருக்கு இறந்தவரின் கைகளை பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பூத கண்ணாடி வைத்து...

தமிழகத்தில் முதல்-அமைச்சராக நான் பதவி ஏற்ற பின்னர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு, தமிழ்நாடு முழுவதும் பொய் பிரசாரம் செய்கின்றனர். அ.தி.மு.க. அரசால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது என்று கேட்கிறார்கள். எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் செய்த பணிகளில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

குடிமராமத்து திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 78 பணிகள் ரூ.44 கோடியில் நடைபெற்றுள்ளன. மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கான அந்த திட்டத்தையும் கூட மு.க. ஸ்டாலின் குறைகூறுகிறார்.

அ.தி.மு.க. அரசில் ஏதாவது குறை இருக்குமா என்று பூதக்கண்ணாடியை கொண்டு தேடித்தேடி பார்க்கிறார். எவ்வளவு பெரிய பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. அரசில் குறைகளை பார்க்க முடியாது. ஏராளமான நிறைகள் தான் உள்ளன. அதை தான் பார்க்க முடியும். ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் அதை வைத்தும் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்து விடுவார்.

சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில், அதிகாரிகள் நேரில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கின்றனர். இதில் மொத்தம் 9 லட்சத்து 77 ஆயிரத்து 670 பேரிடம் மனு பெறப்பட்டது. அதில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 660 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. தமிழகம் முழுவதும் மொத்தம் 3 மாதத்தில் 2½ லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பூர்வமான கல்வி கிடைப்பதற்காக தொலைநோக்கு சிந்தனையோடு மடிக்கணினி வழங்கப்படுகிறது. இதன்படி மாநிலம் முழுவதும் 51 லட்சத்து 67 ஆயிரத்து 19 பேருக்கு ரூ.7 ஆயிரத்து 241 கோடி மதிப்பில் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படு கிறது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் நீதிமன்றம் சென்றார்கள். எனினும், அனைவருக்கும் பரிசு தொகுப்புடன், ரூ.1,000 வழங்கப்பட்டது.

ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட அ.தி.மு.க. வின் அரசு, தொடர்ந்து அதை செய்து வருகிறது. ஆனால், இந்த நலத்திட்டங்கள் எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை. திட்டமிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றன.

மருத்துவ படிப்பு

தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை முன்பு 34 சதவீதமாக இருந்தது. ஜெயலலிதா வழியில் தொடர்ந்து கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததால் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 49.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் தனியாருக்கு இணையாக ஸ்கேன் கருவிகள், டயாலிசிஸ் கருவிகள், புற்றுநோய் கண்டறியும் கருவிகள் என வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். கிராமப்புற மக்கள் அங்கேயே சிகிச்சை பெறுவதற்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஒருவர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். அவரும் குணமடைந்து விட்டார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் தான் பரவுகிறது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். வெளியே சென்று வீட்டுக்கு செல்லும் போது கைகள், கால்களை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பணி விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தம்: அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பணி விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசுக்கு, மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2. மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் இணையவழி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மாணவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும் என்பதால் இணையவழி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. “கொரோனா சமூக பரவல் இல்லை என்றால் நோய்த்தொற்று ஏணிப்படிகள் போல அதிகரிப்பது ஏன்?” தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
‘கொரோனா சமூக பரவல் இல்லை என்றால், நோய்த்தொற்று தினமும் ஏணிப்படிகள் போல அதிகரிப்பது ஏன்?‘, என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
4. மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருக்கும் கருத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து இருப்பதுடன் மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
5. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கி இருந்தால் ஊரடங்கு தளர்வுகள் தேவை இருந்திருக்காது மு.க.ஸ்டாலின் அறிக்கை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கி இருந்தால் ஊரடங்கு தளர்வுகள் தேவை இருந்திருக்காது என்றும் மருத்துவ கட்டமைப்பை திட்டமிட்டு கொரோனாவை தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.