உலக செய்திகள்

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு;பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு + "||" + Coronavirus death toll in Italy rises to 1,441

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு;பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு;பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்ந்துள்ளது.
ரோம்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனா, தென்கொரியா,  ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இத்தாலியில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.   

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 175 பேர் பலியாகி உள்ளனர். 3,000-க்கும் அதிகமானவர்கள்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை  1,266 லிருந்து 1,441 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,660 லிருந்து 21,157 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தாலியில் வசிக்கும் மக்கள் உடல்நலம், அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு மற்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: கேரளாவில் முதல் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. இத்தாலியில் கொரோனா வைரசிலிருந்து குணமடைந்த 101 வயது முதியவர்
இத்தாலியில் 101 வயதான முதியவர் ஒருவர், கொரோனா வைரசில் இருந்து குணமடைந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
4. ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 277 இந்தியர்கள் ஜோத்பூர் வந்தடைந்தனர்
ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 277 இந்தியர்கள் ஜோத்பூர் வந்தடைந்தனர்
5. இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.