மாநில செய்திகள்

பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதை தவிர்க்கவும்; முதல்-அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் + "||" + Tamil Nadu CM Edappadi K Palaniswami announces holiday upto class V standard till March 31.

பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதை தவிர்க்கவும்; முதல்-அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதை தவிர்க்கவும்;  முதல்-அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
கொரோனா அச்சம் காரணமாக தமிழக மக்கள் தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என முதல்-அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கர்நாடக மாநிலத்தில் 76 வயதான முதியவர் ஒருவரும், டெல்லியில் 68 வயது மூதாட்டி ஒருவரும் பலியாகி உள்ளனர். இந்த நோய்க்கிருமி மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்து உள்ளது.  அதிகபட்சமாக மராட்டியத்தில்  31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில், 137 நாடுகளில் 5,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என முதல்-அமைச்சர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள உத்தரவில்,

* கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம். 

* மாநில எல்லைகளில் அமைந்துள்ள திரையரங்குகளை மூட உத்தரவிடப்படுகிறது.

* பொது இடங்களில் அதிகளவில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்.

* எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்படுகிறது.

* கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் குழந்தைகள் செல்ல வேண்டாம்.

* வீட்டிற்குள் நுழையும்போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

* தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி,. முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி முறை விடுமுறை விடப்படுகிறது.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட ரூ 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* வழிபாட்டு தலங்களுக்கு வருவோரை கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.

* கிருஷ்ணகிரி, நெல்லை, தென்காசி,திருவள்ளூர்,வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களிலும் திரையரங்குகள், வணிகவளாகங்களை மூட உத்தரவிடப்படுகிறது.

* வருவாய் நிர்வாக ஆணையர் தனது அறிக்கைகளை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சரிடம் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்படுகிறது.

* நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு தெரிவிக்க சுகாதாரத்துறை அமைச்சருக்கு உத்தரவிடப்படுகிறது.

* நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அனைத்து  மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.