மாநில செய்திகள்

திமுக பொதுச்செயலாளர் யார்? மார்ச் 29ல் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் + "||" + On March 29th, the DMK will take over. General Meeting

திமுக பொதுச்செயலாளர் யார்? மார்ச் 29ல் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்

திமுக பொதுச்செயலாளர் யார்? மார்ச் 29ல் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்ச் 29ல் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது.
சென்னை,

திமுக.வை உருவாக்கிய அண்ணா, கட்சியில் தலைவர் பதவியை காலியாகவே வைத்திருந்தார். ‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர். அவருக்காக கட்சித் தலைவர் பதவி காலியாக இருக்கும்’ எனக் குறிப்பிட்ட அண்ணா, திமுக.வின் பொதுச்செயலாளராகவே பதவியேற்றார். 1969-ல் அண்ணா மறைவுக்கு பிறகே நாவலர் நெடுஞ்செழியன் பொதுச்செயலாளர் என்றும், கலைஞர் கருணாநிதி தலைவர் என்றும் முடிவானது.

இந்தநிலையில்  திமுக ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே 1957 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பேராசிரியர் க.அன்பழகன் 1977 இல் இருந்து திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். இந்தநிலையில்  பேராசிரியர் அன்பழகன் கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

 43 ஆண்டுகள் பொதுச்செயலாளராக பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் மறைவைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளர் யார் என  திமுகவில் கேள்வி எழுந்தது.  தி.மு.க.வில் கட்சி தலைவருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பதவி பொதுச் செயலாளர் பதவியாகும். தற்போது இந்த பதவியை மு.க.ஸ்டாலின் கூடுதல் பொறுப்பாக நிர்வகித்து வருகிறார்.

கட்சியில் மூத்த நிர்வாகியாக அனுபவம் வாய்ந்தவராக துரைமுருகன் உள்ளதால் அவர் பொதுச்செயலாளர் ஆவது உறுதி என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது.

துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆகும்பட்சத்தில் அவர் வகித்து வரும் பொருளாளர் பதவி டி.ஆர். பாலு அல்லது ஐ.பெரியசாமிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்ச் 29ல் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது. பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பாக இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.  மார்ச் 7ஆம் தேதி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து  தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது.