தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு + "||" + Ministry of Family and Health Welfare: Total number of confirmed #COVIDー19 cases across India is 107

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் தனது வேட்டையைத் துவக்கிய, கொரோனா வைரஸ், தற்போது 132க்கும் அதிகமான நாடுகளில் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக அளவில், 1.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,436 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரொனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை கர்நாடகா, டெல்லியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில்ம் மராட்டிய மாநிலத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

டெல்லியில் 7 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 11 பேரும், கர்நாடக மாநிலத்தில் 6 பேரும்,மராட்டியத்தில்  31 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். லடாக்கில் 3 பேரும், ஜம்மு காஷ்மீரில் 2 பேர் தெலங்கானாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது

ராஜஸ்தானில் 2 பேர், தமிழகம், ஆந்திரா, பஞ்சாப் மாநிலத்தில் தலா ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக, நாட்டில் 17 வெளிநாட்டவர்கள் உள்பட 107 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இந்தியாவில் சுகாதார அவசரநிலை ஏதும் ஏற்படவில்லை. ஆதலால் பதற்றப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும்  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 93 பேருடன் தொடர்பு வைத்திருந்த 4 ஆயிரம் பேர் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்கள். நாடுமுழுவதும் 42 ஆயிரம் பேர் சமூக கண்காணிப்பில் உள்ளதாகவும், சமூகரீதியான கண்காணிப்பு, தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்தும் வார்டு, போதுமான தடுப்பு கருவிகள், மருத்துவ ஊழியர்கள் என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்  எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.