தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி: அசாமில் பள்ளி கூடங்களை மூட உத்தரவு; தேர்வுகள் ஒத்தி வைப்பு + "||" + Coronavirus scare: Assam shuts schools, cancels exams till March 29

கொரோனா வைரஸ் எதிரொலி: அசாமில் பள்ளி கூடங்களை மூட உத்தரவு; தேர்வுகள் ஒத்தி வைப்பு

கொரோனா வைரஸ் எதிரொலி:  அசாமில் பள்ளி கூடங்களை மூட உத்தரவு; தேர்வுகள் ஒத்தி வைப்பு
இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அசாமில் பள்ளி கூடங்கள் வருகிற 29ந்தேதி வரை மூடப்படுகின்றன.
கவுகாத்தி,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது.  கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,436ஐ தாண்டியுள்ளது.  உலகெங்கிலும் 145 நாடுகளில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 810க்கும் மேற்பட்டோர் நேற்று வரை பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்து உள்ளது.  67 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் உள்பட 107 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்த 107 பேருடனும் தொடர்புடைய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தேசிய பேரிடராக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

மராட்டியத்தில் நகர்ப்புற பகுதிகளில் அமைந்த அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் வருகிற 31ந்தேதி வரை மூடப்படுகின்றன என அந்த மாநில அரசு நேற்று அறிவித்தது.

கொரோனா வைரசை தொற்றுநோய் என்று நேற்று அறிவித்த உத்தரகாண்ட் அரசாங்கம் இதேபோன்று உத்தரகாண்டில் அனைத்து திரையரங்குகள் மற்றும் கல்லூரிகள் வருகிற 31ந்தேதி வரை மூடப்படுகின்றன என்றும் அறிவித்தது.

இந்நிலையில், அசாம் தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, வைரஸ் பாதிப்பு அசாமில் இல்லை என்றாலும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.

இதன்படி, திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் வருகிற 29ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.  அரசு ஆடிட்டோரியங்களில் நடத்த திட்டமிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  இதேபோன்று தனியார் நிறுவனங்களும் இந்த விதிகளை பின்பற்றும் என நம்புகிறோம்.

பள்ளி கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை வருகிற 29ந்தேதி வரை உடனடியாக இன்றிலிருந்து மூடப்படுகின்றன.

அசாமில் பொதுமக்கள் அதிக அளவில் கூடாமல் கவனித்து கொள்ளும்படி அனைத்து துணை ஆணையாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  எந்தவித நெருக்கடியையும் கையாளும் முழு திறனுடன் அரசு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.