மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை : விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை - பீலா ராஜேஷ் + "||" + Intensive inspection at airports BeelaRajesh

கொரோனா முன்னெச்சரிக்கை : விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை - பீலா ராஜேஷ்

கொரோனா முன்னெச்சரிக்கை : விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை - பீலா ராஜேஷ்
கொரோனா முன்னெச்சரிக்கையாக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இந்தியாவில் இதுவரை 107 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் முதல் உயிரிழப்பும், அதனை தொடர்ந்து டெல்லியிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பொது இடங்களில் மக்கள் கூட திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை. 

கேரளா வந்த விமானத்தில் பயணித்த தமிழர்களின் தகவல்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
2. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட மருத்துவர்களை அனுமதிக்க வேண்டாம் - பீலா ராஜேஷ்
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட மருத்துவர்களை அனுமதிக்க வேண்டாம் என டிஜிபிக்கு சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ் கடிதம் அனுப்பி உள்ளார்.