தேசிய செய்திகள்

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை + "||" + 4 Terrorists Killed In Encounter In Kashmir’s Anantnag

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் தெற்கு பகுதியில் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள தியால்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் நேற்று காலை அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் பலி ஆனார்கள்.

அவர்களில் ஒருவர் பெயர் தாரிக் அகமது என்றும், அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி என்றும், மற்ற 3 பேரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது.

இதற்கிடையே தெற்கு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் உள்ள அல்ஸ்டாப் மிர்பசார் என்ற இடத்தில் 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 3 கையெறி குண்டுகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதேபோல் பாரமுல்லா மாவட்டத்தில் செஸ்டி காலனியில் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.