தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நாளை முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை + "||" + Puducherry to close schools from tomorrow till further order

புதுச்சேரியில் நாளை முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் நாளை முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,436ஐ தாண்டியுள்ளது.  உலகெங்கிலும் 145 நாடுகளில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 428 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்து உள்ளது.  இந்த 107 பேருடனும் தொடர்புடைய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தேசிய பேரிடராக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள  அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வருகிற 16ந்தேதி முதல் 31ந்தேதி வரை விடுமுறை அளிக்க அரசால் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா அச்சம் அதிகரித்த நிலையில், புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், புதுச்சேரியில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசத்தில் மந்திரி பி.சி. சர்மா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், திரையரங்குகள், திருமண மகால்கள் போன்றவை அடுத்த உத்தரவு வரும்வரை மூடப்படும்.

கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள போர் கால அடிப்படையில் நாங்கள் பணி செய்து வருகிறோம்.  இதற்காக 50 தனி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.